சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட  இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்று காலை 4 மணிக்கு பஹ்ரெய்ன் ஊடாக டுபாய்க்கு செல்வதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது சந்தேக நபரின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை வல்லப்படைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 23 கிலோ கிராம் வல்லப்பட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 23 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.