இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில், கிணறு ஒன்றிலிருந்து, 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் ,குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் கவலையில் காரணமாக பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
காணாமல் போயுள்ள தம்பதியினை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM