சம்பளத்தை  உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள் ; சாமிமலை மக்கள்

Published By: Digital Desk 4

11 Oct, 2018 | 05:48 PM
image

மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.

இதனையடுத்து காலை 9 மணியளவில் சாமிமலை ஸ்டரஸ்பி தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை முன் அத்தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த  200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறான போராட்டம் செய்தாலும் வேதன அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாலும் நல்லாட்சிக்கு வாக்களித்தும் மக்களாகிய நாங்கள் ஐனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

நாங்கள் பணிக்கு செல்லும் நாள் ஒன்றுக்கு 1000ரூபாய் வேதனம் வழங்க வேண்டும் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கோசம் எழுப்பியதோடு மலையக அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக இருந்து எமக்கு 1000 ரூபாய் பெற்று தராதபட்சத்தில் சந்தா பணத்தை நிறுத்துவோம் எனவும் கூறினர்.

தொழிலாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறும் போது ஐனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் வெளிநாட்டு பேச்சுவார்த்தை என பிற நாட்டு களுக்கு சென்று விடுகின்றனர் இம்முறை இவ்வாறு இல்லாமல் இருவரும் தலையிட்டு வேதன உயர்வு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதியில் உருவபொம்மையை எரிந்து போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பினர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14