அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  10  சந்தேகநபர்களையம் குற்றவாளிகளாக இனங்கண்ட தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு மரணதன்டனை வழங்கப்பட்ட 10 குற்றவாளிகளும் கடந்த 1998 ஆம் ஒரே குடும்பத்தை சேரந்த 6 பேரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்வம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற வந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றத்தில்  குறித்த 10 பேருக்கும் மரண தன்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.