(ஆர்.யசி, எம்.ஆர் .எம்.வசீம் )

நாட்டில் கடந்த 8 வருட காலப் பகுதியில் 4399 கிலோ கிராம் கஞ்சாவும் , 1913 கிலோ கிராம் கொக்கெயினும் , 1631 கிலோ கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றுடன் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி நளிந்த ஜயதிஸ்ஸவினால் 2010 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக  அரச நிர்வாகம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவே இதனை தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக மீட்கப்படும் போதைப்பொருட்கள் இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் அவற்றை நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதவானின் முன்னால் அழிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை 2010 முதல் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில்  230 பேர் வெளிநாட்டு பிரஜைகள் என அவர் தெரிவித்துள்ளார்.