சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்கஅமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சுமார் 17 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 69 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.