2 ஆவது போட்டி நாளை ஆரம்பம் ; தொடரை சமன் செய்யுமா மேற்கிந்தியத் தீவுகள் ?

Published By: Vishnu

11 Oct, 2018 | 04:31 PM
image

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. 

இந் நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் துடுப்பாட்டத்திலும் சரி, பந்து வீச்சிலும் சரி, களத்  தடுப்பிலும் சரி பலம்பொருந்திய அணியாக திகழும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் இப் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் கசிந்துள்ளது. அவர் போட்டியில் ஆடாமல் இருந்தால் அணித் தலைவராக ரகானே செயற்படுவார். கோலியின் இடத்துக்கு மயாங்க் அகர்வால் இடம்பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரை இவ்விரு அணிகளும் 95 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மேற்கிந்திய அணி 30 போட்டிகளிலும், இந்திய அணி 19 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளதுடன், 46 போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20