துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்த அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த (2016-09-08 ) அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.