நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவிருக்கும் கொம்பு வெச்ச சிங்கம்டா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டின் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின், தமிழில் ‘காதலும் கடந்து போகும் ’, ‘கவண் ’, ‘ப பாண்டி’, ‘ஜுங்கா ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக ”கொம்பு வெச்ச சிங்கம்டா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரனிடம் கேட்டபோது,

‘இந்த படம் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகம் என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார் ஏற்றிருந்த கேரக்டரின் நீட்சி என்று சொல்லலாம். இந்த படத்தில் மடோன்னா செபாஸ்டின், கிராமத்து பெண்ணாக தோன்றுகிறார். நவம்பர் 3ஆம் திகதி முதல் படபிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் சசிகுமார், மடோன்னாவுடன் யோகி பாபு, இயக்குநர் மகேந்திரன்,சூரி, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.’ என்றார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால், நடிகை மடோன்னா செபாஸ்டியனை ஒப்பந்தம் செய்தோம் என்கிறார்கள் படக்குழுவினர்.