தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என துணை முதல்வரும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.’ என்றார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுபித்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நிர்வாகிகள் இதில் பங்குபற்றினர்.