பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிடும் முன்னர் ஒரு முறைக்கு பல இரு முறை யோசிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா தனது அறிமுக போட்டியிலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, அதிரடியாக 99 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள் அடங்களாக கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் அவர் அதிரடியாக விளையாடிதனால் சேவாக்குடனும், இளம் வயதில் சதம் விளாசியதனால் சச்சின் டெண்டுல்களுடனும் ஒப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளதாவது, ‘பிரித்வி ஷாவை சேவாக்குடன் யார் ஒப்பிடு செய்தாலும் அதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செயய வேண்டும். இறுதியாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷா தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

பிரித்வி ஷா தனிப்பட்ட திறமையை பெற்றுள்ளார். அதேபோல் சேவாக் அவரது திறமையை பெற்றுள்ளார். பிரித்வி ஷா தற்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளார். சேவாக்கை போன்றோர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

பிரித்வி ஷா தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறந்த முறையில் தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.