மூச்சுப் பரிசோதனைக்காக வாயால் ஊதும்படி கட்டளையிட்ட பொலிஸாரை சட்டத்தரணியொருவர் மதுபோதையில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவமொன்று இந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பொலிஸார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்களிலில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்துள்ளார். 

அவர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழ மூச்சுப் பரிசோதனை செய்வதற்காக மோட்டார் சைக்கில் சாரதியான சட்டத்தரணியிடம் ஊதும் படி கட்டளையிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இத் தாக்குதலினால் ஒரு பொலிஸ் அதிகாரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்தியது. கண்மூடித்தனமாக மோதி கீழே தள்ளிவிட்ட மற்றோர் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்துள்மையினால், சட்டத்தரணியின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடம் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.