'தேவ்'

Published By: Daya

11 Oct, 2018 | 10:54 AM
image

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும்  'தேவ்' திரைபடத்தின்  டப்பிங் வேலைகள் ஆரம்பம்.

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன்  திரில்லர்  அட்வெஞ்சர் திரைப்படம் ”தேவ்“. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 

இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் தொடங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி ஆரம்பித்து வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு  மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது.

ஏற்கெனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று. அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர்.

அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமாலய மலையில் படமாகிறது.

புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமாலய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்குகின்றது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, வாய், பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ, உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளிவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35