ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார இன்று குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாகல சில்வாவுக்கும், பொலிஸ் உளவாளி நாமல் குமாரவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான குரல் சோதனை மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட குரல் மாதிரிகள் அவ்விருவரின் குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்  நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரது கொலை விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் சில குரல் பதிவுகளை கையளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.