வாயினுள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கெட்டுடன் இளைஞர் கைது!!!

Published By: Sindu

10 Oct, 2018 | 03:30 PM
image

தங்கொட்டுவ நகரில் பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடுவதற்கு முயன்ற இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அவரது வாயினுள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கெட்டுக்களையும் மீட்டனர். 

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலவ்வத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் நகரின் பாதுகாப்பு கருதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென இளைஞர் ஒருவர் பொலிஸாரைக் கண்டு ஓடியதில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவ்விளைஞரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

அவ்விளைஞர்  வாயைத் திறக்காமல் கைகளால் எதையோ கூற முற்பட்டதால் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவ்விளைஞரைக் கைது செய்து பரிசோதித்த போது அவரது வாயினுள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கட்டைக் கைப்பற்றியுள்ளனர். 

தங்கொட்டுவ நகருக்கு வந்த ஒருவர் தனக்கு இந்த கஞ்சா பக்கட்டை வழங்கியதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சைது செய்யப்பட்ட இளைஞருக்கு கஞ்சா பக்கட்டை வழங்கிய நபரைத் தேடிக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ள  தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்த இளைஞரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49