திருகோணமலை குச்சவெளி பிரேதேச செயலகத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆலய நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆலயத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் நீண்ட காலமாக ஆலயததினால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்  நிலையில் அக் காணியில் ஒரு குறித்த பகுதியை தொல்பொருள் திணைக்களம் காரணம் காட்டி அபகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் திருகோணமலைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சருக்கும் குச்சவெளி பிரதேச செயலாளருக்கும்  தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.