இந்தியாவின், மகராஷ்டிராவில் 30 அடி கிணற்றுக்குள் வீழ்ந்து சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பும் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சிறுத்த சிறுத்தை மீட்கப்பட்ட கணொளி காட்சிகளை வனவிலங்குகளை காக்கும் குழுவினர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.‍ 

முகநூலில் இந்த காணொளி வெளியாகி 20 மணி நேரத்தில் 4,000 பேரால் பார்க்கப்பட்டதுள்ளதுடன், யூ.டி.யூ.பில் 16,000 பேரால் பார்க்கப்பட்டுள்ள அதேவ‍ேளை சிறுத்தையை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. 

குறித்த காணொளிக் கட்சியில் வனத்துறையினர் கயிற்றில் ஏணியை கட்டி கிணற்றுக்குள் இறக்கியதும், தண்ணீரில் தவித்த அந்த சிறுத்தை தண்ணீரிலிருந்து தாவி ஏணியில் அமர்ந்து கொண்டது. அதன் பின் மரக்கூண்டு ஒன்றை கிணற்றுக்குள் கயிறு கட்டி இறக்கவும், மர ஏணியில் அமர்ந்திருந்த அந்த சிறுத்தை கூண்டுக்குள் தாவியது.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளும் வனவிலங்குகளை காக்கும் குழுவினரும் சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.