கொழுப்பில் இடம்பெற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைச்சர் ஒருவர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் உதவி கேட்டு, பயணித்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

பாராளுமன்ற பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, நேற்று அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிழவியது.

இந்நிலையில், தனது அமைச்சிலிருந்து பாராளுமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் செய்வதறியாது, குறித்த வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் உதவிகேட்டு பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

இச்சர்ப்பத்தின் போது குறித்த அமைச்சர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைகவசம் அணியாது பயணித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.