89 வயதுடைய வயோதிபப் பெண்  ஒருவர்  மீது  பாலியல்  வல்லுறவு  புரிந்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய ஒருவரை  பண்டாரகம பொலிஸார் சந்தேகத்தின்  பேரில்  கைது செய்துள்ளனர். 

sexual

அவரது வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றும் பெண்ணின் கணவரே இச் செயலை செய்துள்ளார். 

வீட்டின் பின் பகுதி காணியில்  சந்தேக நபர் வாழ்கிறார். 

அவர் வயோதிப பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக விசாரணை மூலம் தெரிய வருகிறது. 

வயோதிப் பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம  பொலிஸார்  புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.