நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய  கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதியில் வசிக்கும் 05 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேருக்கும் தற்காலிகாக மாற்றிடம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை அம்பகமுவ பிரதேச செயலாளர் முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை அட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதனால் அவ் வீதியை பயண்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.