கை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும் இது சம்பந்தமாக இலங்கை நோயாளர்களுக்கு இலவச அறிவுத்தல்களைச் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெங்களுரில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் சிரேஷ்ட  தசை இழைய மருத்துவர் ஸ்ரீநிவாஸ் விருகரு தெரிவித்துள்ளார்.

புற்நோய் தொடர்பில் ஆலோசனைகளையும் போதிய அறிவுறுத்தல்களையும் வழங்கும் செயற்பாடுகளை கொழும்பு போர்ட்டே சர்வதேச நிறுவனம் அப்பலோ வைத்தியசாலையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் போர்டே சர்வதேச நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அப்பலோ மருத்துவமனையின் சிரேஷ்ட தசை இழைய மருத்துவர் ஸ்ரீநிவாஸ் விருகரு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கை கால்களிலும் மற்றும் மெருதுவான தசை இழையங்களிலும் பீடிக்கும் புற்றுநோய் அரிதான வகையினைச் சேர்ந்ததாகும். இந்நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு இதுவரைகாலமும் சிகிச்சை அளிக்கும்போது சம்பந்தப்பட்ட பாகங்களை அகற்றியே ஆகும். ஆனால் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் அவயவங்களை அகற்றாமல் நோயாளர்களை முற்றிலும் குணப்படுத்த முடியுவதற்கான ஏது நிலைமைகள் தற்போதுள்ளன.

கைகால்கள் மற்றும் மிருதுவான தசை இழையங்களில் ஏற்படும் புற்றுநோய் அரிதான வகையானதாகும். சாதாரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகையில் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினையே இந்த வகை புற்றுநோய் கொண்டிருக்கின்றது. 

இதனுடைய அரிதான தன்மை காரணமாகவே மருத்துவர்களுக்கும் பொதுமக்களும் இதுபற்றிய பூரணத்துவம் மிகக் குறைவாக காணப்படுகின்றது. இந்நோயானது வயதுவேறுபாடின்றி பீடிக்க கூடியதொன்றாகும். இது உயிராபத்தை விளைவிக்க கூடியதுமாகும். 

ஆனால் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சைகளை பெறுவது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. அதாவது இந்நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் உச்ச கட்டத்தினை அடைந்த பின்னரே நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அதேநேரம் மருத்துவர்களுக்கும் இந்நோயை ஆரம்பத்திலேயே நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரணமாகவே இருக்கின்றது. இதற்கான சிகிச்சையும் சற்றே சிக்கலானது. அனைத்து புற்றுநோய் வைத்தியசாலைகளிலும் இதற்கான சிகிச்சை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதற்கான அடிப்படை தேவையானது நோயை முதலிலேயே இனங்கண்டுகொள்வதாகும். மிகத்திறமையான அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை நாடி அவர்களிடத்தில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும்.

இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு பெங்களுரில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இலங்கையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக பெங்களுர் அப்பலோ மருத்துவ மனையும் இலங்கை போர்டே சர்வதேச நிறுவனமும் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அதன்பிரகாரம் இலங்கையில் இவ்வாறான நோயாளர்கள் காணப்படும் பட்சத்தில் உரிய ஆலோசனைகளை வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்நோயகர்களுக்கான தகவல்களை உரியவகையில் வழங்கும் மத்திய நிலையமாக போர்டே சர்வதேச நிறுவனம் இயங்குகின்றது. இந்த ஆலோசனை சேவைகள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த நோயானது பெரும்பாலும் குழந்தைகளை பீடிப்பதே மிகப்பெரும் ஆபத்தாகவுள்ளது. குழந்தைகளின் கைகால்களில் வலிகள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக கூறுவதாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

அதன் மூலம் நோய் தன்மையை முன்னதாகவே இனங்கண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும். நவீன சிகிச்சைகளின் கீழ் இந் நோயை குணப்படுத்த முடியும்.

எனினும் நோயாளரும் நோயளரின் குடும்பத்தினரும் இதுபற்றி போதிய அறிவற்றிருப்பார்களாயின் இந்நோயானது உடல் பூராகவும் பரந்து விடுகின்றது இதனால் கைகால்களை இழக்க வேண்டிய தூப்பாக்கிய நிலைமைக்கு இலக்காகின்றனர். 

ஆகவே தான் நாம் இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த முன்வந்துள்ளோம். இந்நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்தியா சென்று சிகிச்சை பெற்று திரும்புகின்றார்கள். அவ்வாறு திரும்பும்பியவர்களுக்கும் தேவையான பராமரிப்பு வசதிகளை இலவசமாகவே போர்ட்டோ சர்வதேச நிறுவனம் ஊடாக வழங்கப்படுகின்றது என்றார்.