தனது திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கூத்தன் பட தயாரிப்பாளரான நீல்கிரீஸ் முருகன்.

நீல்கிரீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் ஏ.எல் வெங்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.

இத் திரைப்படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார் இறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா சோனால் கீரா ஆகியோரும் நாகேந்திர பிரசாத் விஜய் டீவி முல்லை கோதண்டம் இயக்குநர் பாக்யராஜ் ஊர்வசி மனோபாலா ஜீனியர் பாலையா கவிதாலாயா கிருஷ்ணன் ஸ்ரீரஞ்சனி பரத் கல்யாண் ராம்கி கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்துள்ளது.

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்டின் பிரமாண்ட தயாரிப்பிலும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பிலும் உருவான இத் திரைப்படம் எதிர் வரும் 11ஆம் திகதி திரைக்கு வருகிறது.

அன்மையில் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனையை புதிய முறையில் ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நீல்கிரீஸ் முருகன்.

கூத்தன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

“கூத்தன் திரையிடப்படும் தமிழ் நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் கூப்பன் பெட்டிகள் வைக்கப்படும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் திரைப்பட டிக்கெட்டின் இலக்கத்தையும் ரசிகர்கள் தங்களது தொலைப்பேசி இலக்கங்களையும் முகவரியையும் எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும் 

தமிழகம் முழுவதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1 பவுன் தங்கம் வீதம் 18 பவுன் அளிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.