Published by R. Kalaichelvan on 2018-10-09 14:58:09
ஜே.வி.பி.யினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையில் உள்ள சில சரத்துக்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முடிவை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.இதன்போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்கும் நோக்கத்தில் ஜே.வி.பி. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிபிடத்தக்கது.