இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.