பெறுந்தோட்ட தொழிலாளர்களின் இரண்டாம் கட்டபேச்சிவார்த்தை இடம் பெறுகின்ற இந்நிலையில் மலையகத்தில் பலபகுதிகளில் மக்கள் ஆரபாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர் .

அந்தவகையில் நோர்வூட் வெஞ்சர் தோட்ட தொழிலாளர்கள்

இன்று காலை 1000 ரூபா சம்பளம் வழங்கபட வெண்டுமென வலியுறுத்தி ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக தோட்ட மக்கள்  ஆர்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன் போது தோட்ட தொழிலாளரின் உழைப்பபை சுரன்டாதே, கம்பணியால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறு கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்காதே போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் தனது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.தோட்ட தொழிலாளியான நாங்கள் இன்று அட்டைகடி சிறுத்தை பன்றி குளவி போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி நாள் ஒன்றுக்கு 17கிலோ தேயிலை கொழுந்தினை பறித்து கொடுத்தால் மாத்திரம் தான் எங்களுக்குனு 730ரூபா வழங்கபடுகிறது ஆனால் நாங்கள் தெரிவு செய்யபட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் கவனம் செலுத்தி எங்களுக்கான அடிப்படை சம்பளம் 1000ரூபாவாக பெற்று கொடுக்க உரிய அதிகாரிகளுக்கு வழியுருத்த பட வேண்டுமெனவும் ஆரபாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.எனினும் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ரூபாவை பெற்று கொடுக்க மலையக அரசியல்வாதிகள் அனைவரும் முன்வர வேண்டுமென மக்கள் கோறிக்கை விடுத்தனர்