20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன்

மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த அந்த நபர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மெக்சிகோவின் ஜுவான் கார்லோஸ் மற்றும் அவரது மனைவி பெட்ரீசியா. அவர்கள் வசித்து வந்த பகுதியில், திடீரென்று இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ஜுவான் கார்லோஸின் குடியிருப்பில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே அந்த தம்பதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தமது மனைவியால் ஏமாற்றி குடியிருப்புக்கு அழைத்து வரப்படும் இளம் பெண்களை ஜுவான் கர்லோஸ் கழுத்தை அறுத்து கொலை செய்வதாகவும், அதன் பின்னர் அந்த சடலத்துடன் பாலியல் உறவு கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பின்னர் அந்த சடலங்களை துண்டு துண்டாக வெட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கியுள்ளனர்.

முதலில் பொலிசாரின் விசாரணையில் ஜுவான் 10 கொலைகள் வரை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் 20 பெண்கள் என தெரியவந்தது.