நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி, கலவான மற்றும் அயகாம பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தால் இன்று மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.