அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவில் ஹஸீஸ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த இருவரை கல்முனை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளதாக அத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

இப்பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரிதுத்துள்ளதாக கிடைத்த  தகவலின் அடிப்படையில் கல்முனை, அம்பாறை மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.சங்கராஜா மற்றும் மதுவரிப் பரிசோதகர்களான ஏ.ஆனந்தநாயம், எம்.கியாஸூதீன் உள்ளிட குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.