(ஆர்.விதுஷா )

எல்பிடிய பகுதியில் ஆற்றுக்கு குளிக்கச் சென்று ஆற்றில் மூழ்கி காணாமல்போன மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

11 வயதுடைய கவிந்து கின்ஹான் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எல்பிடிய வலம்பாகம பகுதியில் நேற்று ஆற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் ஆற்றில் மூழகியுள்ளனர்.

இதன்போது இரு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போன குறித்த மாணவனை தேடும் பணிகளில் பொலிஸாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டு வந்தநிலையில், இன்று காலை 10.30 மணியளவில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.