(நா.தினுஷா) 

மாகாணசபைத் தேர்தல் உரியகாலத்தில் நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது, ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

இரு பிரதான கட்சிகளிடையிலும் சுமூகமான நிலை காணப்பட்டாலும் மாகாணசபைதேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் இருக்கட்சிகளுக்கிடையிலும் வேறுப்பட்ட கருத்துக்களே நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.