கொட்­ட­தெ­னி­யாவ சிறுமி சேயா செதவ்மியை கடத்தி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றவாளியான சமன் ஜயலத்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் வழக்கு இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்ட சமன் ஜயலத்திற்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் காணாமல்போன நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட கொட்­ட­தெ­னி­யாவ - படல்­கம,  அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற 5 வய­து­டைய முன் பள்ளிச் சிறுமி கடத்தப்பட்டு கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு அதன் பின்­ன­ரே துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.