தகவல் தொழிநுட்ப துறையில் நோர்வே முதலீட்டாளர்களுடன் இலங்கை மேற்கொண்டுவரும் திட்டங்களை பாராட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அந்த துறையினை மேலும் செயற்திறனாக்கி அதனூடாக முழுமையான வெற்றி இலக்குகளை அடைய அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து பொது திட்ட வரைபுக்குள் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். 

இலங்கை - நோர்வே வர்த்தக சமூகத்தினரை ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்தார். 

நோர்வே தொழிநுட்ப மற்றும் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாகவே எதிர்கொள்ளும் பிரச்சினையாக மனித வள பற்றாக்குறையே காணப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு தொழிநுட்பசார் கல்வி நிறுவனங்களையும் மேற்படிப்புக்களையும் முதலீட்டாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.