(எம்.மனோசித்ரா)

குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டியிருந்த கொடுப்பனவில் 100 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநாகர சபை வழங்கியுள்ளதாக என பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத் தொகை இன்று  திங்கட்கிழமை காலை காசோலை மூலாமாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்தனவிடம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இவ்வருடம் ஜூலை மாதம் முதல் கொழும்பு மாநாகர சபை காணி அபிவிருத்தி கூட்டத்தாபனத்திற்கு 207 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டியிந்தது. 

எனினும் அத் தொகை வழங்கப்படாமையின் காரணமாக கெரவலபிடிய குப்பை சேகரிக்குமிடத்தினால் கடந்த சனிக்கிழமை முதல் தற்காலிகமாக கொழும்பு நகரில் குப்பை சேகரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

அதன் காரணமாக கொழும்பு நகரை எல்லைகுட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குப்பை மேடுகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.