திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் படுகொலை நினைவேந்தல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் திருக்கோவில் பொது மக்களின் ஏற்பாட்டில் நாளை மாலை திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுக் மைதானத்திற்கு அருகாருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நினைவுச்சுடர் ஏற்றி இந்  நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இப் படுகொலை சம்பவமானது கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 திகதி  சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமினை நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதே இடம்பெற்றது.