உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படுவதுடன் அவற்றுக்கு இறக்குமதித் தீர்வையை ஏற்படுத்துவதனூடாக விவசாயிகளின் உற்பத்திக்கு நிகரான விலை கிடைக்குமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கரவெட்டி வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பழமரத் தோட்டத்திற்கான பழமரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வவுனியாவில் உழுந்து பாரம்பரிய நெல் உற்பத்தி வலயம், முல்லைத்தீவில் நிலக்கடலை உற்பத்தி வலயம், யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் மாம்பழ உற்பத்தி வலயம் ஆகியவற்ற உருவாக்கியது போல யாழ்ப்பாணத்தில் திராட்சை அபிவிருத்தி உற்பத்தி வலயத்தை உருவாக்கவுள்ளோம்.
மேலும் விவசாயிகளின் நலன் கருதி இப்போது நெல்லுக்கு ஸ்திரமான விலையை ஏற்படுத்தினோம். அடுத்த வாரம் சோளத்துக்கு ஸ்திரமான விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. உருளைக்கிழங்கு சின்னவெங்காயம் பெரிய வெங்காயத்திற்கும் உத்தரவாத விலையை ஏற்படுத்தி இவற்றின் இறக்குமதிக்கு தீர்வை ஏற்படுத்திக்கட்டுப்படுத்தவுள்ளோம்.
எனவே ஜனாதிபதியின் செயற்றிட்டத்துடன் இணைந்த எமது தேசத்தை விவசாயத்தில் வளப்படுத்த வேண்டும் என்றார்.
கல்லூரி அதிபர் பாலராணி ஸ்ரீதரன் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதியமைச்சர் இராமநாதன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், மாகாணக் கல்விப்பணிப்பாளர் உதயகுமார், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM