பிரித்­தா­னி­யாவின் பிர­தான மான்­செஸ்டர் திணைக்­கள அர்ன்டேல் விற்­பனை நிலை­யத்­தி­லுள்ள மல­ச­ல­கூ­டத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நப­ரொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது­செய்­யப்­பட்ட விவ­காரம் அந்தப் பிராந்­தி­யத்தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சன­சந்­தடி மிக்க விற்­பனை நிலை­யத்தில் அமைந்­துள்ள மல­ச­ல­கூ­டத்தில் மிகவும் மோச­மான முறையில் குறிப்­பிட்ட நபரை இள­வ­ய­தினர் ஒருவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத் ­தி­யதை அறிந்த போது, தாம் மிகவும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக கிரேட்டர் மான்­செஸ்டர் பொலிஸ் பாலியல் குற்­றங்கள் பிரிவு அதி­கா­ரி­யான கிறிஸ் மட்டொக்ஸ் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இந்த சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் குறிப்பிட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.