காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவை கொழும்பு மாநகர சபை செலுத்தாமையாலேயே கொழும்பு நகரக் குப்பைகள் அகற்றப்படாமைக்கு காரணமாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 207 மில்லியன் ரூபா கொடுப்பனவில் ஒரு பகுதியேனும் கொழும்பு மாநகர சபை வழங்கினால் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கைகளை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் முன்னெடுக்குமென தெரிவித்துள்ளது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மீளச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மேற்கோள் காட்டி நேற்று முதல் குப்பைகள் அகற்றும் நடவடிக்கையிலிருந்து காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் விலகிக் கொண்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் முதல் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கை நிறுத்தப்பட்டமைக்கு காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனமே காரணம் என்று கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.