சின்­னத்­திரை நடிகர் சாய் பிரசாந்த் தனதுவீட்டில் விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தொலைக்­காட்சி தொகுப்­பா­ள­ராக அறி­மு­க­மாகி பல தொலைக்­காட்சி தொடர்­களில் நடித்த இவர் முன்­தினம் பார்த்­தேனே, வட­கறி, நேரம் உள்­ளிட்ட பல திரைப்­ப­டங்­களில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தில் நடித்­துள்ளார்.

இவ­ரது பெற்­றோர் பெங்­க­ளூரில் உள்­ளனர். சாய்­ பி­ரசாந்த், சென்னை வள­ச­ர­வாக்­கத்தில் தனி­யாக வசித்து வந்தார். இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்­பவ இடத்­திற்கு வந்த அவ­ரது நண்­பர்கள் மற்றும் பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்­பி­ரசாந்த் உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­தனர்.

இதன்போது சாய்­ பி­ரசாந்த் வீட்டில் இருந்துபொலிஸார் ஒரு கடி­தத்தை கைப்­பற்றி உள்­ளனர். அந்த கடி­தத்தை அவர் தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்கு முன் எழுதி வைத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இரண்டு பக்­கத்­திற்கு எழு­தப்பட்டுள்ள அக் கடி­தத்தில்,

எனது அன்­புக்­கு­ரிய சுஜிதா சாய் பிர­ஷாந்­த்துக்கு"உன் மீது அதீத காதல் வைத்­தி­ருந்தேன். பொஸஸிவ் கார­ண­மாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவ­லைப்­ப­டாதே. எனது மரணம் உனக்கு எந்த வகை­யிலும் இடை­யூறு அளிக்­காது. எனது மர­ணத்­திற்கு கண்­டிப்­பாக நீ கார­ண­மாக இருக்க முடி­யாது. ஒரு சத்­தியம் மட்டும் செய்­கிறேன். உனது 33 சவரன் நகை கண்­டிப்­பாக திரும்பி வரும்.

எனது காதல் எப்­போதும் உண்­மை­யா­னது. நான் செல்­வதால் தயவு செய்து அழாதே. ரக்‌­ஷி­தாவும் தான் (மகள்). என் பெற்­றோர் கண்­டிப்­பாக உன்­னையும் உன­து ­கு­டும்­பத்­தா­ரையும் கேள்வி கேட்க மாட்­டார்கள்.

உன் சித்­தப்பா என் அப்­பா­விடம் உப­யோ­கித்த வார்த்­தை­க­ளுக்­காக மன்­னிப்புக் கேட்­கும்­படி சொல்­லவும். நான் மட்­டுமே எனது மர­ணத்­திற்குக் காரணம்.

என் பெற்றோர் உனக்கு ஐந்து இலட்சம் பணமும், உனது நகையையும் கொடுப்­பார்கள். எனது மர­ணத்­திற்குப் பிற­கா­வது தயவு செய்து உனது கோபத்தை விட்­டு­விடு. நான் ரக்‌­ஷி­தா­வுக்கு எப்­போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்‌­ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்­தப்பா, நிரஞ்­சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சர­வண குமார்.

ரக்‌­ஷி­தாவின் புரி­த­லுக்கு, ஒரு கண்­டிஷன் யாரும் சண்­டை­யி­டவோ அழவோ கூடாது. நான் மட்­டுமே எனக்கு பிரச்­சினை. எல்­லோ­ரு­டனும் இணைப்பில் இருக்­கவும். புரிந்­துகொள். ராடான் மீடியா முக்­கி­ய­மாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்­குமார்) ஆகி­யோ­ருக்கு நன்றி. மிஸ் யூ லொட் அம்மா, ரக்‌­ஷி­தா­வுக்கு எனது ஆசீர்­வா­தங்கள் எப்­போதும் உண்டு.

லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்­சனா குடும்­பத்தார்.

"லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த். உம்மா"

டேக் கேர் எவ்ரிபொடி. உங்­களை எல்லாம் சிரிப்­புடன் விட்டுச் செல்­கிறேன். இவ்­வா­றாக அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ­ரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் ஏற்கனவே திருமணமாகி விவா கரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.