19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 144 ஓட்டங்களினால் இலங்கை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி வாகை சூடி, கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இறுதிப் போட்டி  பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­கா­வி­லுள்ள ஸ்ரீரே பங்­க­பந்து சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் யாசஸ்வி ஜெய்ஸ்வால் 85 ஓட்டத்தையும், பிரப்சிம்மன் சிங் 65 ஓட்டத்தையும், அனூஜ் ராவத் 57 ஓட்டத்தையும் மற்றும் ஆயுஷ் பாடோனி 52 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை  அணி சார்பில் கலன பெரேரா, கலக செனரத்ன மற்றும் தூலித் வெலலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 305 என்ற இமாலய வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி 305 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 144 ஓட்டத்தினால் தோல்வியை  தழுவிக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிஷான் மதுசங்க 49 ஓட்டத்தயைும், நவோத் பரணவிதான 48 ஓட்டத்தையும், பாசிந்து சூயியபண்டார 31 ஓட்டத்தயைும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்களையும், சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுக்களையும், மோஹித் ஜங்ரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.