(நா.தினுஷா) 

கடந்த ஆட்சிக் காலத்தில் அதாவது 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை மத்தியஸ்தலமாக இலங்கை காணப்பட்டமையே இன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

மேலும் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றசெயல்களை குறைப்பதற்கு முழுமையான அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளதுடன் நீதிதுறையை புதிப்பதற்கான பல்வேறுப்பட்ட பணிகள் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி நீதிமன்ற நீதிபதிகளின் சங்கத்துக்கும் நீதி மற்றும் சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் இடம்பெற்ற விசேட கலந்தரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.