கிளிநொச்சி  ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இன்றியும் தொழில் வாய்ப்பின்றியும் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப்படும் ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது 414 வரையான குடும்பங்களைச்சேர்ந்த 1383 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற மிகவும் பின்தங்கிய கிராமமாகக் காணப்படும் இக்கிராமத்தின் குடியிருப்பு வீதிகள் பிரதான வீதி எதுவும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இதனால் அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லாக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் அதிக பணத்தை செலவழித்து தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இப் பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களை பகிர்ந்தளிக்குமாறு  கோரிக்கை விடுத்தபோதும், இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.