இளையோருக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இலங்கை

Published By: Vishnu

07 Oct, 2018 | 01:13 PM
image

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரின் இறுப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இறுதிப் போட்டி  பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­கா­வி­லுள்ள ஸ்ரீரே பங்­க­பந்து சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

அதற்கிணங்க இந்திய அணி 14 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 69 ஓட்டங்களை பெற்றுள்ளது. அனுஜ் ராவத் 20 ஓட்டத்துடனும், யாசஸ்வி ஜெய்ஸ்வால் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29 ஆம் திகதி பங்­க­ளா­தேஷில் ஆரம்­ப­மா­னது. 8 அணிகள் பங்­கு­கொள்ளும் இப்­போட்டித் தொடரின் குழு ஏ யில் இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான், நேபாளம், ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய அணி­களும் குழு பீயில் இலங்கை, பாகிஸ்தான், ஹொங் கொங், வர­வேற்பு நாடான பங்­க­ளா­தேஷும் இடம்­பெற்­றி­ருந்­தன.

லீக் சுற்றில் தத்தம் குழுக்­களின் அனைத்துப் போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் இந்­தியா 6 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்திலும், பங்­க­ளாதேஷ் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகி­யன 4 புள்­ளி­க­ளுடன் இரண்­டா­மி­டங்­க­ளு­டனும் அரை­யி­று­திக்கு முன்­னே­றின.

பங்­க­ளா­தே­ஷுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­தியில் இந்­திய அணி 2 ஓட்­டங்­களால் வெற்றி பெற்று இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. இப்­போட்­டியில் இந்­தியா சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 172 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் 170 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 2 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழுவி இறுதிப் போட்­டிக்­கான வாய்ப்பைத் தவ­ற­விட்­டது.

இலங்­கைக்கும் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது அரை­யி­று­தியில் இலங்­கையின் வெற்­றிக்கு நுவ­னிந்து பெர்­னாண்­டோவின் சதம் பெரும் பங்­காற்­றி­யது. முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட இலங்கை 16 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றி­யது. பின்னர் சுதா­ரித்­துக்­கொண்ட இலங்கை மத்­திய வரிசை துடுப்­பாட்ட வீரர்கள் நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்­ணிக்­கையை வலு­சேர்த்­தனர். இறு­தியில் நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 209 ஓட்­டங்­களை பெற்­றது. இதில் சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தா­டிய நுவ­னிந்து பெர்­னாண்டோ கடைசிப் பந்தில் ஆட்­ட­மி­ழந்து 113 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கிய ஆப்­கா­னிஸ்தான்  ஆரம்­பத்தில் சிறப்­பாக செயற்­பட்ட போதும், மத்­திய வரிசை வீரர்­களின் விக்கெட் சரி­வினால் 178 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 31 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­வி­யமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41