மொரகஹஹேன, கொனபல பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் களவாடப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது வங்கியில் பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.