இலங்கையின் மாபெரும் மற்றும் புகழுக்குரிய கட்டடக்கலை தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வருடாந்த கண்காட்சியான “Members' Work & Trade Exhibition 2016” அண்மையில் நடைபெற்ற போது, நிர்மாணத்துறையில் கட்டடக்கலைஞர்களின் மூலமாக பயன்படுத்தப்படும் நவீன பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியின் போது, நாட்டின் முன்னணி பன்முகத்துறை நிறுவனமானCeyoka (Pvt) Ltd இன் insulation மற்றும் water proofing தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

Rockwool அன்ட் Glass wool போன்ற தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்ததுடன், இவற்றின் மூலமாக முறையே ஒலியிலிருந்தும், அனலிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகின்றன. 

Ceyoka என்ஜினியரிங், வலுவை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருவதுடன், நிலையாண்மையை எய்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது. புதிய பச்சை கட்டிடங்கள் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

பலகைகள், குழாய்கள் மற்றும் கம்பளம் போன்றன உள்ளடங்கலாக Rockwool அன்ட் Glass wool தயாரிப்புகள் Ceyoka காட்சிகூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

உலகளாவிய ரீதியில் insulation க்காக பரந்தளவு பயன்படுத்தப்படும் உள்ளங்கமாக Glass wool அமைந்துள்ளது. 

குறிப்பாக ஒலியை கடத்தும் இயல்பு, இலகுவான எடை, அதிகளவு இழுவை திறன் மற்றும் சிறந்த அதைப்பு சக்தி போன்றன இவற்றுக்கு காரணங்களாகும். இதன் பிரயோகம் பிரதானமாக சீலிங்களுக்கு மேலாகவும், கூரைகளுக்கு கீழ் பகுதிகள் மற்றும் உள்ளக சுவர்களிலும், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போர்த்தும் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

Glass wool என்பது, கப்பல் கட்டும் செயற்பாடுகள், கொதிகலன் குளிரூட்டல், வாயுகுளிரூட்டல் குழாய்கள், ஒவன்கள் மற்றும் தீப்பற்றாத காப்புடைய கதவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் insulation களில் ஒன்றாக காணப்படுகிறது.

Rockwool தயாரிப்புகள் கற்கள் மூலமாக தயாரிக்கப்படுவதுடன், இலகுவில் தீப்பற்றாத திறனை கொண்டதாக அமைந்துள்ளன. நீண்ட கால அனலிலிருந்து பாதுகாப்பை வழங்குவதுடன், பரிமாணத்திடம் மற்றும் ஒலி அகத்துறிஞ்சல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன. 

தொழிற்துறைசார் கட்டிடங்கள், தொழிற்சாலை கூரைகள் மற்றும் சுவர்கள், களஞ்சியசாலைகள், கப்பல் கட்டிடங்கள், தாங்கிகள், கொதிகலன்கள், ஒவன்கள் மற்றும் உயர் வெப்பநிலையிலுள்ள திரவம் மற்றும் கொதிநீராவி குழாய்கள் போன்றவற்றில் இந்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது.

Ceyoka (Pvt) Ltd இன் Insulation பிரிவின் முகாமையாளர் யசித் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 

“Ceyoka வை பொறுத்தமட்டில் Glasswool மற்றும் Rockwool insulation தீர்வுகளை உள்நாட்டுச் சந்தையிலும் நிர்மாணத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் காட்சிப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக Architect 2016 கண்காட்சி அமைந்திருந்தது. 

எமது தயாரிப்புகள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற விநியோகஸ்த்தர்களிடமிருந்து தருவிக்கப்படுகின்றன. இவை வலுவை சேமிக்கும் திறன் கொண்டவை என்பது சுயாதீனமாக பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டிடம் என்பது போதியளவு காற்றோட்டம் மற்றும் வலுச்சிக்கனமானது என்பதை உறுதி செய்வதன் மூலம் சொத்துக்கு பெருமளவு பெறுமதியை சேர்கக்கூடியதாக இருக்கும்” என்றார். 

வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த பரிபூரண waterproofing தீர்வுகளை வழங்குவதற்கு Ceyoka தன்னை அர்ப்பணித்துள்ளது. Architect கண்காட்சியின் போது, வெவ்வேறு வகையான waterproofing தயாரிப்புகளை Ceyoka காட்சிப்படுத்தியிருந்தது. இவற்றில் bituminous sheets, injection grouting, membrane மற்றும் வெளிப்புற சுவர்களுக்கான தயாரிப்புகள், சீலன்ட் தயாரிப்புகள் மற்றும் திறந்த பிரயோகங்களுக்கான தயாரிப்புகள் உள்ளடங்கியிருந்தன. 

இந்த தயாரிப்புகளின் பயன்பாடு என்பது குளியலறைகள், பெல்கனிகள், கூரை ஸ்லெப்கள், நீர் சம்ப் வகைகள், உள்ளக சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்கள், கீழ்மாடிகள் மற்றும் பதப்படுத்தும் பகுதிகள் போன்றவற்றுக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளன. 

Water proofing தயாரிப்புகள் ISO சான்றளிக்கப்பட்டுள்ளதுடன் பிரித்தானியா மற்றும் அமெரிக்க நியமங்கள் ஆகியவற்றுக்கமைய தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவை மலேசியா, அவுஸ்திரேலியா, எகிப்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணி விநியோகஸ்த்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 

உள்நாட்டு சந்தையில் water proofing தீர்வுகளை வழங்குவதில் 15 வருடங்களுக்கு மேலான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை Ceyoka தன்னகத்தே கொண்டுள்ளதுடன், அதன் முறையான பயிற்சிகளைப் பெற்ற ஊழியர்கள் இந்த தீர்வுகள் பற்றிய முறையான அறிவையும் கொண்டுள்ளனர்.

கம்பனியின் சிறப்பான அனுபவம் நிர்மாணத்துறையில் சிறந்த கௌரவிப்பைப் பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதையும் சேர்ந்த 70க்கும் அதிகமான திட்டங்களுக்கு சேவைகளை Ceyoka வழங்கி வருகிறது. இதில் புகழ்பெற்ற ஜோன் கீல்ஸ் நீர் முகப்பு செயற்திட்டம், சமுத்ரா பீச் ஹோட்டல் கொஸ்கொட, பேருவளை LOLC ஹோட்டல், கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பாரியளவிலான நீர் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் கொழும்பில் அமைந்துள்ள பவர்ஸ் தலைமையக கட்டிடம் ஆகியன உள்ளடங்கியுள்ளன. 

Ceyoka Engineering (Pvt) Ltd இன் Waterproofing பிரிவின் பதில் பொது முகாமையாளர் சன்ன ரொட்ரிகோ கருத்து தெரிவிக்கையில், 

" Ceyoka வினால் சந்தையில் பெருமளவு தீர்வுகள் வழங்கப்படுகின்றன. பல ஆண்டுகாலம் பணியாற்றிய தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த water proofing தீர்வுகளை பெருமளவு தெரிவுகள், உயர் தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன் வழங்கி வருகிறது” என்றார்.