அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை தாங்கிச் சென்று, 350 கிலோமீற்றர் தூரமுள்ள  இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இவ் ஏவுகணை சோதனையானெது, ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் நேற்று இரவு நடத்தப்பட்டது.

முன்னதாக பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம்  திகதி நடத்தப்பட்டதமையும் குறிப்பிடதக்கது.