“முன் எச்சரிக்கையாளர்களை பாதுகாக்கும் சட்டம் அவசியம்”

Published By: Digital Desk 4

07 Oct, 2018 | 10:57 AM
image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சாதாரண பொது மக்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றார்கள் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது எனத் தெரிவித்த இந்திய தகவல் அறியும் ஆணைக்குழுவின் முதலாவது பிரதம ஆணையாளர் வஜஹாத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நான்கு நாள் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அவர் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- இந்தியாவின் தகவல் அறியும் ஆணைக்குழுவின் முதல் பிரதம ஆணையாளர் என்ற வகையில் உங்களின் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:- மிகப்பெரும் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. நான் 1968ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான எனது முழுமையான பணிக்காலத்தினையும் இந்திய நிருவாக சேவையிலேயே பணியாற்றிருந்தேன். அதன் பின்னர் 26ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2005ஆம் ஆண்டு முதல் 19ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2010ஆம் ஆண்டுவரையில் பிரதம தகவல் ஆணையாளராக பணியாற்றிருந்தேன். இரண்டு பணிகளும் வேறுபட்டவையாகவே இருந்தன. நிருவாக சேவையில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டிருந்தாலும் தகவல் ஆணையாளராக இருக்கும் போது அரசாங்கம் எந்தெந்த துறைகளில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அது தொடர்பில் விசேட கவனம் எடுக்க வேண்டியிருந்தது. அரச அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும்ரூபவ் ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும் அரசு அலுவலகங்கள்ரூபவ் நிறுவனங்கள் மற்றும் துறைகள் மக்களுக்கு தேவையான தகவல்களை தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதி செய்வதே இலக்காக இருந்தது. மேலும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு வெளிப்படைத் தன்மை இன்றியமையாதவொன்றாக இருந்தது.

கேள்வி:- தகவலறியும் ஆணைக்குழுவின் முதலாவது பிரதம ஆணையாளர் என்ற வகையில் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தீர்கள்?

பதில்:- ஆணைக்குழுவை அமைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுத்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டமானது அக்காலத்தில் இந்தியாவுக்கே புதிதாக இருந்தது. அவ்வாறான நிலையில் அந்தச் சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுவை அமைக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகிய கட்டமைப்புக்களை நிறுவிய அனுபவம் நன்றாகவே இருக்கின்ற போதும் இத்தகைய ஆணைக்குழுவை நிறுவிய அனுபவம் இருக்கவில்லை. இத்தகைய  ஆணைக்குழுவை அமைப்பதென்பது ஏறக்குறைய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஒப்பானதாகவே இருக்கும். ஆகவே ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் முன் அனுபவமுமின்றி, அதுகுறித்த கருத்தாடலுமின்றி இருந்தமையால் வினைத்திறனான கட்டமைப்பொன்றாக அமைப்பதில் சாவல்கள் காணப்பட்டிருந்தன.

கேள்வி:- தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக சாதாரண மக்கள் போதிய அறிவைப் பெற்றிருந்தனரா? அதற்காக அரசாங்கம் விசேட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டிருந்ததா?

பதில்;:- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சாதாரண பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கே உள்ளது. 24ரூபவ்25ஆம் சரத்துக்களின் பிரகாரம் அரசாங்கத்தின் கடமைகளில் அதுவும் ஒன்றாகின்றது. ஆனால் அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. தற்போது 13ஆண்டுகளாகின்ற போதும் கூட அரசாங்கம் அச்செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

மறுபக்கத்தில் இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான கோரிக்கை சாதாரண பொதுமக்கள் மத்தியில் இருந்தே மேலெழுந்தது. மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள், பேரணிகள் அதற்காக நடத்தப்பட்டிருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ளதேவ்துங்கிரி என்ற சிறு கிராமத்தில் இதற்கான அடித்தளம் இடப்பட்டது. அவ்வாண்டில் தான் - மனிதஉரிமை ஆர்வலர்களான அருணா ரோய்ரூபவ் நிக்கில் தேரூபவ் அஞ்சிரூபவ் ஷங்கர் சிங் ஆகியோர் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்க முடிவுசெய்தனர்.

அந்த அமைப்பின் மூலம் அரச திட்டங்களில் பணிபுரியும் சாதாரண மக்கள் எவ்வாறு சம்பளம் வழங்குவதில் ஏமாற்றப்படுகின்றனர்ரூபவ் நியாய விலை கடைகளில் எவ்வாறு முறையாக விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை உள்ளிட்ட விடயங்களை கண்டறிந்தனர். அவர்கள் கிராம மக்களோடு தங்கி புரிந்த மூன்றாண்டு சேவையின் விளைவாக மஸ்தூர் கிசான் சக்தி சங்கட்டன் என்ற அமைப்பு 1990 ஆம் ஆண்டு உருவாகியது.

அது தகவல்களை அரசாங்கத்திடமிருந்துபெற்று பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டுவந்தது. அதன் பின்னர் எவ்வித தடையுமின்றி அரச துறையினால் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வமைப்பு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவர் என்ற ஊரில் 5 ஏப்ரல் 1996 அன்று போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக 40 நாட்கள் நடத்தியது. இது தகவல் பெறும் உரிமைச் சட்டம் கோரும் இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக இருந்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் நாடெங்கும் பரவியது. ஆயிரக்கணக்கான சிவில் சமூகத்தினரும் பொதுமக்களும் அணிதிரண்டனர். இவ்வாறு தான் தகவல் அறிதலுக்கான கோரிக்கைகள் மக்கள் மத்தியிலிருந்து மேலெழுந்து வந்திருந்தன. ஆகவே சாதாரண பொதுமக்களிடத்தில் இச்சட்டம் சென்றடைவதற்கு சிவில் சமூகத்தினரின் பங்களிப்பே அதிகமாக இருந்து வருகின்றது.

கேள்வி:- தகவல் அறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர் சாதாரண பொதுமக்கள் தகவல்களை பெற்றுக்கொள்வதில் ஆhவத்தினைக் காட்டினார்களா?

பதில்:- ஆணையகம் நிறுவப்பட்டதும் சாதாரண பொதுமக்களை விடவும் ஆயிரக்கணக்கான அரச உத்தியோகத்தர்களே தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டார்கள். ஆனால் பிற்காலப்பகுதியில் அதாவது 2008இற்கு பின்னரான காலப்பகுதியில் 40சதவீதத்திற்கும் அதிகமான சாதாரண கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களே தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வத்தினை காட்டியிருந்தனர். இதுவொரு முன்னேற்றகரமான விடயம் எனக்கொள்ளலாம். 

கேள்வி:- இலங்கையின்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அது சாதாரண மக்களிடத்தில் சென்றடைவதற்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்:- இலங்கையின் தகவல் அறியும் உரிமைச்சட்டமானது சிறந்ததாகவே காணப்படுகின்றது. இந்த சட்டத்தினை உருவாக்கின்றபோது பொதுநலவாய மனித உரிமைகள் முன்முயற்சிப் பி;ரிவினால்

அதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டபோது என்னிடமும் ஆலொசனைகளைக்; கோரியிருந்தர்கள். அதன் பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இலங்கையின் ஆணைக்குழு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்தபோது எனது அனுபவத்தினை பகிர்ந்திருந்தேன். இலங்கை மட்டுமன்றி பங்களாதேஷ்ரூபவ் நேபாளம்ரூபவ் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இச்சட்டம் வரைகின்றபோது இந்தியா இணை அனுசரணையை வழங்கியுள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் வெற்றி மக்கள் அதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. ஊடகத்துறையினரும் தமது செய்திக் கதைகளுக்காக இந்த சட்டத்தினை பயன்படுத்த முடியும். தகவல்கள் பெறப்பட்டு அரசாங்கம் விமர்சிக்கப்படுகின்றது என்றால் அவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தம்மை மீள்பரிசீலனை செய்து கொள்வதற்கு முன்வரவேண்டும். அரசாங்கம் அந்தப்படிப்பினையை நிச்சயம் பெற்றுக்கொண்டு செயற்படுவதே வெளிப்படைத் தன்மையையும் ஜனநாயகத்தினையும் நிலைபெறச் செய்வதற்கு வழிவகுப்பதாக இருக்கும். 

மேலும் சாதாரண மக்களிடத்தில் தகவல்கள் சென்றடைவதற்கு நவீன தகவல் தொழில் நுட்பவசதிகளை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகின்றது. குறிப்பாக கூறுவதானால் இந்தியா மிகப்பெரும் நாடு. அங்கு தகவல்கள் அனைத்தும் கணனிமயமாக்கப்பட்டுள்ளன. அது தகவல்களை இலகுவில் வழங்குவதற்கு ஏதுவாகின்றது. அதனைவிடவும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் காணொளிகள் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் உள்ளன. டெல்லியில் ஆணைக்குழு அமைந்திருந்தாலும்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சதாரண பொதுமகன் ஒருவருக்கு தொடர்பு கொள்வதற்கானரூபவ் தகவல்களை அறிவதற்கான விண்ணப்பத்தினை இணயத்தின் ஊடாக மேற்கொள்வதற்குரிய சகல ஏதுநிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இத்தகைய வசதிகளை உட்புகுத்துவதும் சிறந்ததொரு முன்னெடுப்பு என்றே கூறுவேன். ஆகவே இலங்கை இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும்.

கேள்வி;:- தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுநலவழக்குகளில் எவ்வாறு தாக்கம் செய்கின்றது?

பதில்;:- இந்தியாவைப் பொறுத்தவரை சமூக விடயங்களைக் கண்காணிப்பதற்கென்று பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் பங்கேற்கும் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. உணவுப் பொருட்களின் பொதுவிநியோகத்தை ஆய்வு செய்வதற்கான சமூக அமைப்பு உள்ளது. மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை கவனிப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பு செயற்படுகின்றது.

பொதுப்பணிகளை ஆய்வு செய்வதற்கென்று சமூக கணக்காய்வு அமைப்பு உள்ளது. அவர்கள் பொதுப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்ப செயற்படுவார்கள். உதாரணமாக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டடங்கள் கட்டுமிடத்திற்கு நேரில் சென்று கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்தும் கட்டடத்தின் பயன்பாடு குறித்தும் அதன் உண்மையான பெறுமதி குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைப்பதுடன் அரசாங்கத்திடம் உண்மை நிலையைக் கேட்டறிந்து அதனை மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.

அரசாங்கம் தான் கட்டுகின்ற கட்டடங்களில் எத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அத்தகைய கட்டடங்களின் பயன்பாடுகள் பற்றியும் மக்கள் அறிந்துகொள்வதற்கு சமூக கணக்காய்வு நிறுவனங்களை அனுமதிப்பது அவசியமாகும். இலங்கையில் அத்தகைய விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் அரசாங்கம்ரூபவ் தொடர்புடைய திணைக்களத்தை விசாரித்து மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது அவசியமானதாகும்.

தகவல் அறியும் உரிமை என்பது தகவல் பெறுவதற்கான உரிமையைக் குறிக்கிறது. அதன் பிரகாரம் பொதுமகனுக்கு எவ்விடயம் தொடர்பிலும் கேள்வி கேட்கலாம். விலக்களிக்கப்பட்ட விடயங்களைத் தவிர ஏனைய அனைத்திற்கும் அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும். அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்பதே அதன் உண்மையான நோக்கமாகும்.

கேள்வி:- முன்னெச்சரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- முன் எச்சரிக்கை செய்பவர்களால் ஒரு விடயம் முன் வைக்கப்பட்டு அந்த விடயம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் கருத்தாடலுக்கு விடப்படுகிறது. அவர்களின் பிரதிபலிப்புகள் அவதானிக்கப்படுகின்றன. பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படுகிறது. அவ்வாறு சட்டமாக்கப்பட்ட பின்னரும் கூட எச்சரிக்கை செய்பவர்களின் கருத்துக்களுக்கு அமைய அந்த சட்டத்தில் சில சரத்துக்களை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யலாம்.

அதுதான் முன் எச்சரிக்கை செய்பவரின் பங்களிப்பாக இருக்கின்றது. எவ்வாறாயினும் முன்னெச்சரிக்கையாளர் சட்டம் என்பது அவசியமானதாகும். அச்சட்டமானது அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கோபம் கொள்ளாமல் இருப்பதற்கு உதவுவதாக இருக்கின்றது. ஒரு சட்டமியற்றப்பட்டவுடன் அது முழுமையான சட்டமாகி விடாது. அது மீண்டும் திருத்தத்திற்கு உட்படலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விளைவாக மக்களுக்குப் பயன்படும் விதத்தில் சட்டங்களில் தேவையான மாற்றங்கள் ஏற்பட முன் எச்சரிக்கையாளர் சட்டம் வகைசெய்கிறது.

கேள்வி:- உங்களது ஐந்தாண்டுகால சேவையில் மறக்கமுடியாத சம்பவங்கள் என்று எதையாவது குறிப்பிடமுடியுமா?

பதில்:- எதைச்சொல்வதுரூபவ் பல விடயங்கள் மறந்துவிட்டன. ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். டெல்லியில் சேரிப்பகுதியில் வசித்துவந்த ஒரு பெண் ஒரு தகவலைக் கோரியிருந்தார். குறித்த திணைக்களம் அவருக்கு தகவலை வழங்க முடியாது என்று தெரிவித்ததுடன் தகவல் திணைக்களத்திற்குச் சென்று மக்கள்தொடர்பு அதிகாரியைச் சந்தித்து தகவலைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

அவர் அந்த இடத்தை அடைவதற்கு 50ரூயஅp;பாவோ அல்லது 100ரூயஅp;பாவோ செலவு செய்து நீண்டதூரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் அந்த இடத்தை அடைந்து விண்ணப்பித்தபோதும் அவருக்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. இருந்தும் அவர் தளரவில்லை. தனக்கு நேர்ந்ததைப்போல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்று நினைத்த அவர்ரூபவ் மேன்முறையீடு செய்தார்.

அது ஏன் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அவர் தன்னை கவனிப்பார் யாருமற்ற டெல்லியின் சேரிப்பகுதியைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண். அவருடன் உயர் அதிகாரிகள்

அமர்ந்து அப்பெண் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த தகவலை வழங்குவதற்குத் தயாராகியிருந்ததுடன் அவர்கள் தாமே தம்மை நியாயப்படுத்திக்கொண்டனர். அந்தப் பெண்ணிற்கு நூறு ரூயஅp;பாயோ நூற்றைம்பது ரூயஅp;பாவோ கொடுத்து தகவலையும் வழங்கினர். டெல்லியைப் பொறுத்தவரை தகவலறியும் உரிமை சட்டத்தை குடிசைப் பகுதியில் இருப்பவர்கள்கூட பயன் படுத்துகின்றனர்.

கேள்வி:- உங்களுடைய சேவைக்காலத்தில் நீங்கள் அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் அழுத்தங்களைச் சந்தித்தீர்களா?

பதில்:- இல்லை. நான் அரசாங்கத்திடமிருந்து எத்தகைய அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்கவில்லை. ஆனால் அரசாங்கம் மெத்தனமாகச் செயற்படும் அவ்வளவு தான்.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13