அக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்றிரவு பெய்த மழையை  அடுத்து பிங்கா ஓயா ஆற்று நீர் கண்டி - மாத்தளை பிரதான வீதி வழியே ஓட ஆரம்பித்ததால் சுமார் 4 அடிவரையான வெள்ளம் நிரம்பி காணப்பட்டது.

இதனால் நேற்று மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரை அப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்தது. வெள்ளம் வழிந்து மகாவலி கங்கையுடன் சங்கமமாகிவிட்டதால் பாரிய இழப்புக்கள் பெருமளவு குறைந்திருந்தது.