அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையலாம் என முதலீட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்ள்ளது.

டொலரின்  பெறுமதி வீழ்ச்சியுடன் மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது இதன் காரணமாக பெரும் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியா இந்தோனோசியா போன்ற நாடுகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எண்ணெய் இறக்குமதியில் தங்கியுள்ள இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகள் மசகு எண்ணெய் விலைகள் மேலதிக அழுத்தங்களை கொடுத்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாய் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போதைக்கு அது சரிவிலிருந்து மீள்வது கடினம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவே அதிக பாதிப்புகளை   எதிர்கொண்டுள்ளது எனவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.