நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடாங்கொட பகுதிகளுக்கு இடையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக அதிவே வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குபடி வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.