வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தீருவில் பகுதியில் நிர்மானிக்கப்படவிருந்த 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

வீர மரணமடைந்த 12 போராளிகளுக்கும் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நடும் பணிகள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்படவிருந்தன.

எனினும் வல்வெட்டித்துறை நகர சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரின் தலையீட்டினால் குறித்த அடிக்கல் நாட்டும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.